“இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…40.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன – கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம்போலச்
சாந்துணையும் சஞ்சலமே தான்”
எங்கே
நிம்மதி….எங்கே நிம்மதி…அங்கே எனக்கோர் இடம் வேண்டும்= இப்படி ஏங்கும் மனம் யாரிடம் தான் இல்லை?
ஒரு
நாளில் உண்பது ஒரு படி அரிசிச் சோறு ; உடுப்பது நான்கு முழ ஆடை; ஆனால் மனம் எண்ணுவதோ எத்தனை கோடி நினைவுகள்
; இருப்பதை விடுத்துப் பறப்பதைப் பிடிக்க எண்ணித்
துன்புறும் மக்களே..!, அமைதி இல்லாமல் சாகும்
வரை துன்பத்தில் உழல்வதுதான் வாழ்க்கையோ…? மனமே ! ’செல்வம் என்பது சிந்தையின்
நிறைவே ’என்பதை அறிந்து வாழ்வாயாக..!
”கவறு பெயர்த்தன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்புமின் அறிவுடையீர்…..” – காமக்கணிப் பசலையார், நற்றிணை.;243.
அறிவுடையீர்..! சூதாடு கருவி புரண்டு விழுதல் போல
நிலையில்லாத வாழ்க்கையின் பொருட்டுப் பொருளைத் தேடி, அருமையான நுங்கள் காதலியரை விட்டுப்
பிரியாது கலந்தே இருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக