இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…24.
ஒளவையார் அருளிய மூதுரை
குணமும்
தொடர்பும்
‘நற்றாமரைக்
கயத்தில் நல்லன்னம் சேர்ந்தாற்போல்
கற்றாரைக்
கற்றாரே காமுறுவர் – கற்பிலா
மூர்க்கரை
மூர்க்கர் முகப்பர் முது காட்டில்
காக்கை
உகக்கும் பிணம்.”
தாமைஅப்
பூவை அன்னம் சேர்ந்தாற்போல, கற்றவரைக் கற்றவரே விரும்புவர். இடுகாட்டில் உள்ள பிணத்தைக்
காக்கை விரும்புவது போல, கல்வியில்லாத மூடரை மூடரே விரும்புவர்.
உரையாசிரியர்
: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.
இணைப்பு:
பற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய
கற்றலின் காழினியது இல்.” – பூதஞ்சேந்தனார்; இனியவை நாற்பது, 40.
பற்பல
நாளும் வீணே கழியாது, பயனுள்ள நூல்களைக் கற்பதைப் போல் இனிமை உடைய செயல் வேறு எதுவும்
இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக