இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…31.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”ஆண்டாண்டு
தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார்
வருவரோ மாநித்தீர் – வேண்டா
நமக்கும்
அதுவழியே நாம் போமளவும்
எமக்குஎன்
என்று இட்டுண்டு இரும்.”
அவர் இறந்துவிட்டார் என்று
வருந்தி எத்தனை ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்தவர் மீண்டு எழுந்து வரமாட்டார்; நாமும்
என்றாவது ஒருநாள் இறப்பது உறுதி. ஆதலால் நம் வாழ்நாள் முடிவதற்குள் நாமும் நன்றாக உண்டு,
கவலையற்று அறவழி நின்று பிறர்க்கு உதவி செய்து
வாழ்தலே பெருமைக்கு உரியதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக