வெள்ளி, 1 டிசம்பர், 2023

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…21.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…21.

ஒளவையார் அருளிய மூதுரை

போலி அறிவின் இழிவு.

“கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத் – தானுந்தன்

பொல்லாச் சிறகை விரித்தாடினாற் போலுமே

கல்லாதான் கற்ற கல்வி.”

 

வான் கோழி தன்னை மயிலாக நினைத்து ஆடினாலும் மயிலாகாது. அதுபோல, கல்லாதவன் கற்பவர் போல் நடித்தாலும் கற்றவன் ஆகான்.

 

உரையாசிரியர் : பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.

 

இணைப்பு:

”கல்வியான் ஆயகழி நுட்பம் கல்லார் முன்

சொல்லிய நல்லவும் தீய ஆம்…” –முன்றுறை அரையனார்; பழமொழி,3.

கல்வி அறிவு மிக்கோர், கல்லாதாரிடத்துச் சொல்லிய நல்லனவும் தீயனவாம் .

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக