இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…46.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை.)
நீதி நூல்கள் வரிசையில் நறுந்தொகை எனப்படும் வெற்றிவேற்கையின்
ஆசிரியர், பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவரான அதிவீர ராம பாண்டியர் ஆவார். இவர் திருநெல்வேலி நிலப்பகுதியில்,
1564 – 1604 ஆம் ஆண்டுவரை ஆட்சி புரிந்தவர். நைடதம்
, காசிக்காண்டம் உள்ளிட்ட 13 நூல்களைப் படைத்துள்ளார்.
”எழுத்தறி வித்தவன் இறைவன் ஆகும்.”
கல்வி கற்பிக்கும் ஆசிரியன் கண்முன்னே தோன்றும் கடவுள்
ஆவான்.
”அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முத்தற்றே உலகு எனும் வள்ளுவர் வாக்கிற்கிணங்க’ எழுத்து இதுவென அகரம் தொடங்கித் தாய்மொழியைக் கற்பித்து
அறிவுடையோன் ஆக்கும் ஆசிரியப்பணியைப் போற்றுகின்றார் புலவர்.
”எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து.” – சமண முனிவர்கள், நாலடியார்;14.2.
கல்வியைப் போல் அறியாமை என்னும் நோயைத் தீர்க்கும் மருந்து
வேறு ஒன்று எந்த உலகத்திலும் இருப்பதாக நாம் அறியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக