இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…47.
அதிவீரராம
பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை.)
“கல்விக்கு அழகு கசடற
மொழிதல்”
கல்வியறிவு
உடையவன் என்பதை அவன் பேசும் பேச்சைக் கொண்டே அறிந்துகொள்ளலாம். படித்தவன் பிறர் மனம்
நோகும்படி ஒருபோதும் பேசமாட்டான். குற்றம் குறை இல்லாதபடி பேசுவதே படித்த படிப்பின்
சிறப்பாகும்.
“ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்” – மதுரைக் கூடலூர் கிழார் ; முதுமொழிக்காஞ்சி;10.
இவ்வுலகத்தில்
உள்ள மக்கள் எல்லாருள்ளும் உயர்வடைய விரும்புவோன் பிறரிடம் காணப்படும் சிறந்த இயல்புகளையே
பேசப் பழகுதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக