இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…22.
ஒளவையார் அருளிய மூதுரை
அடக்கத்தை இகழாதே.
”அடக்க
முடையோர் அறிவிலரென் றெண்ணிக்
கடக்கக்
கருதவும் வேண்டா – மடைத்தலையில்
ஓடுமீன்
ஓட உறுமீன் வருமளவும்
வாடி
யிருக்குமாம் கொக்கு.”
கொக்கு
தனக்கேற்ற பெரிய மீன் வருமளவும் அமைதியாக இருப்பதுபோல பெரியவர்களும் தமக்கு ஏற்ற காலம்
வரும்வரை அடங்கியிருப்பார்கள். அடக்கத்தை அறியாமை என்று நினைத்து அவர்களை வெல்ல நினைப்பவன்
தோற்றுப் போவான்.
உரையாசிரியர்
: பேரறிஞர் முனைவர் வ. சுப. மாணிக்கனார்.
இணைப்பு:
”ஓதியும்
ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
ஓதி
அனையார் உணர்வுடையார்…” சமண முனிவரகள்; நாலடியார், 27.
பகுத்தறிவு
இல்லாதவர் படித்திருந்தாலும் படிக்காதவர்களே ; பகுத்தறிவு உள்ளவர்கள் படிக்காதிருந்தாலும்
படித்தவர்களுக்கு ஒப்பாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக