இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…44.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
“கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றுஅங்கு எதிர்கொள்வர் – இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயில் சொல்.”
பொருள் இல்லை என்றாலும் கலவியறிவு உடையவனே சிறப்புடையன்
என்று ஊரார் போற்றுவரோ? போற்ற மாட்டார்..!
பொருள் பெற்றவனையே புகழ்ந்து போற்றுவர். கற்றவனே ஆயினும் பொருள் இல்லாதவனை, மனைவியும் விரும்ப
மாட்டாள்; பெற்ற தாயும் கூட அவன் நல்ல மகன் இல்லை என்று .வெறுத்து ஒதுக்குவாள்; பொருள் இல்லாதவன்
சொல்லை எவரும் மதிக்க மாட்டார்கள்.
“ அருள் உடையாரும் மற்று அல்லாதவரும்
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை.” – முன்றுறை அரையனார், பழமொழி; 269.
அருள்
உடைய நல்லார் முதல் அருள் அல்லாதார் வரை, பொருள் உடையோரைப் புகழ்ந்து போற்றாதார் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக