“இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…42.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”ஆறிடும் மேடும் மடுவும்போல் ஆஞ்செல்வம்
மாறிடும் ஏறிடும் மாநிலத்தீர் – சோறிடும்
தண்ணீரும் வாரும் தருமமே சார்பாக
உண்ணீர்மை வீறும் உயர்ந்து.”
அறம் : நன்றே செய்க ; இன்றே செய்க ….!
ஆற்று
வெள்ளத்தினால் உண்டாகும் மேடும் பள்ளமும் போல நாம் வாழுங்காலத்து உயர்வு வரும்போது
செல்வமும் பெருகும் ; தாழ்வு நேரும் போது குறையும்
. ஆதலால் இல்லாதார் நம்மிடம் வந்து உயிர் வாழ
உதவி கேட்பார்கள் அவர்களுக்கு இல்லை என்று கூறாது சோறு போடுங்கள், தண்ணீரும் கொடுங்கள், இத்தகைய அறச்செயலே,
கருணையே நம்மனத்தை மாண்புடையதாக்கும்.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள் வைப்புழி- குறள் ; 226.
வாடும்
வறியவரின் கடும் பசியைத் தீர்க்க வேண்டும். அதுவே
பொருள் பெற்ற ஒருவன், அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து
வைக்கும் இடமாகும்.
சேர்த்த பொருளைப் பெட்டியில் மறைத்து வைக்காது ; பசியோடு வருவாரின் வயிற்றை உன்
பொருள் வைக்கும் இடமாகக் கொண்டால் (உணவு
கொடுத்து) பிற்காலத்தில் உன் பெயர் விளங்கும்
பேறு பெருவாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக