இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…36.
ஒளவையார் இயற்றிய நல்வழி.
”நீரும்நிலமும்
நிலம் பொதியும் நெற்கட்டும்
பேரும்
புகழும் பெருவாழ்வும் – ஊரும்
வருந்திருவும்
வாழ்நாளும் வஞ்சம் இல்லார்க்கு என்றும்
தரும்
சிவந்த தாமரையாள் தான்.”
பிறரை வஞ்சிக்கும் எண்ணம் இல்லாதவன் வாழ்வான். திருமகளின் அருளால்; அவன்
பெற்ற நீர் வளமும் நிலவளமும் நல்ல விளைச்சலைத்தரும்.
வெள்ளை உள்ளம் கொண்ட அவனுக்குப் பேரும் புகழும் செல்வமும் தேடிவர, நிறைந்த வாழ்நாளும் கிடைக்கப்பெற்று
மகிழ்ச்சியுடன் வாழ்வான்.
“கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளக் கோட்டியும் விரகினில்
ஒழிமின் .” இளங்கோவடிகள், சிலப்பதிகாரம் ; 30: 197, 198.
கள்ளுண்ணலையும் களவாடும் எண்ணத்தையும் இழிகாமத்தையும் பொய் உரைத்தலையும்
பயனில பேசுவோர் நட்பையும் உறுதியுடன் கைவிடுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக