இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…67.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”சான்றோர் இல்லாத் தொல்பதி இருத்தலின்
தேன் தேர் குறவர் தேயம் நன்றே.”
அறிவிலும்
ஒழுக்கத்திலும் சிறந்த பெரியோர்கள் இல்லாத இடத் தில் வாழ்வதைவிட , தேன் உண்ணும் குறவர் வாழும் இடமாகிய மலையில் வாழ்தல் நன்று.
”ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர் யான் வாழும் ஊரே “ –பிசிராந்தையார், புறநானூறு: 191.
கல்வி,
கேள்வி, புலனடக்கம் யாவும் சிறந்து விளங்கும் சான்றோர் பலர் வாழும் ஊரே யான் வாழும்
ஊர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக