இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…68.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”குடிஅலைத்து இரந்து வெங்கோலோடு நின்ற
முடியுடை இறைவனாம் மூர்க்கனும் பதரே.”
தன்
குடை நிழலின் வாழும் மக்களை மகிழ்ச்சியுடன் வாழவிடாது அவர்களை வருத்தி வரி, வரி
என வரி வாங்கும் கொடுங்கோல் அரசன் மக்களுள் உள்ளீடு ஒன்றுமில்லாத பதர் ஆவான்.
“குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மைச்
சிறியோன் பெறின் அது சிறந்தன்று மன்னே.” – சோழன் நலங்கிள்ளி, புறநானூறு:
75.
தன் குடையின் கீன்
வாழும் குடி மக்களிடம் வரி வேண்டி இரக்கும்
(யாசிக்கும்)
சிறுமை உள்ளம் படைத்த , மேம்பாடில்லாத ஆண்மை உடையவனுமான
ஒருவனுக்கு அரசு உரிமை கிடைத்தால், அது அவனுக்குத் தாங்க இயலாத சுமையாக விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக