இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…75.
சிவப்பிரகாசர்
இயற்றிய நன்னெறி
” பிறர்க்கு உதவி செய்யார் பெருஞ் செல்வம் வேறு
பிறர்க்கு உதவி ஆக்குபவர் வேறாம் – பிறர்க்கு உதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று பெயல் முகந்து
பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.”
குடிநீராக
உதவாத கடல் நீரைக் கருமேகங்கள் சூழ்ந்து முகந்து கொண்டு மேல் எழுந்து மழையாகப் பொழிந்து
அனைத்து உயிர்களுக்கும் பயன் தரும். அதுபோல, இல்லாதவர்களுக்கு உதவாத பெருஞ்செல்வம் பெற்றவர்தம்
செவத்தை வேறு எவராவது எடுத்துக் கொடுப்பர்.
“பொருளானாம் எல்லமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள்: 1002
இவ்வுலகில்
பொருளால் எல்லாம் கைகூடும் என்று மயங்கிப் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் செல்வத்தைப்
பூட்டி வைத்திருக்கும் ஒருவன், மனிதப் பிறவியில் இழிந்த பிறவியாவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக