சனி, 3 பிப்ரவரி, 2024

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…69.

 

இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…69.

அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை (நறுந்தொகை. )

 

”வித்தும் ஏரும் உளவாய் இருப்ப

எய்த்து அங்கு இருக்கும் ஏழையும் பதரே.”

 

விளை நிலம்  கொண்ட உழவன்கையில் உழுது பயிரிடுவதற்குத் தேவையான விதையும் ஏரும் இருக்கவும்  நிலத்தை உழுது பயிர் செய்யாது சோம்பி இருக்கும்  வேளாளனும் (விவசாயி) வீணானவன் ஆவான்.

 

”உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்

தொழுதுண்டு பின்செல் பவர் – குறள்.1033.

 

உழைப்பால்  உழவுத் தொழில் செய்து, தான் உண்டு, பிறரும் உண்ண உணவு அளித்துவரும் உழவர்களே, இவ்வுலகில் உரிமையுடன் வாழ்வதற்குத் தகுதி உடையோராவர். மற்றையோர் அவரைத் தொழுது உணவு உண்டு, அவர் அடிதொழுது பின் செல்பவராவர்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக