இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…71.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”பொய்உடை ஒருவன் சொல் வன்மையினால்
மெய் போலும்மே மெய் போலும்மே.”
உண்மை
என்ற ஒன்று இருப்பதை அறியாது, பொய்யை உண்மை
போல் பேச வல்ல பொய்யன் ஒருவன் சொல்லும் பொய் மெய் போலத் தோன்றலாம் ஆயினும் அவனை நம்பக்கூடாது.
”பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.” –குறள்.836.
செய்யும்
முறை அறியாத பேதையானவன், ஒரு செயலைச் செய்வானாயின் அச்செயல் கெடுவதோடு தானும் விலங்கிடப்படுவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக