இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…82.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
செல்வச் செருக்கு
”தொலையாப் பெருஞ் செல்வத் தோற்றத்தோம் என்று
தலையாயவர் செருக்குச் சார்தல் – இல்லையால்
இரைக்கும் வண்டூது மலர் ஈர்ங்கோதய் மேரு
வரைக்கும் வந்தன்று வளைவு.”
பெண்ணே…!
எவராலும் எந்தக் காலத்திலும் அசைக்க முடியாது இருந்த மேரு மலையும் ஒரு காலத்தில் வளைவு வந்தது
. ஆதலால், பெரும் செல்வக்குடியில் பிறந்துள்ளோம்
எக்காலத்தும் நமக்கு அழிவில்லை என்று, மேன்மை குணம் உடையோர் ஒருபோதும் கர்வம் கொள்ள மாட்டார்.
மலையே
நிலை குலையும் போது உருண்டோடிடும் பணம், காசு நிலைத்து நிற்குமோ…?
“பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.” – சமண முனிவர்கள், நாலடியார் : 1:6.
நிறைந்த
செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கின்றவர்களே …! நல்வினையாற்ற உங்கள் பொருளைக் கொடுங்கள்
ஏனெனில் நாளைத் தழீஇம் தழீஇம் என்ற ஓசையுடன் அடிக்கப்படும் சாவுப் பறை உங்களுக்கும்
அடிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக