இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…74.
அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றிவேற்கை
(நறுந்தொகை. )
”துணையோடு அல்லது நெடுவழி போகேல்”
துணை
இல்லாமல் நெடுந்தூரம் பயணம் போகாதே.
வாழ்வில்
நல்வழி நடக்க உறுதுணையாவது நம் தமிழ் மறையாகிய திருக்குறள் ஒன்றே.
“இவைகாண் உலகிற்கு இயலாம் ஆறே”.
இந்நூலில்
சொல்லப்பெற்ற வாழ்வியல் நெறிகள் யாவையும் உலக
மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்கு ஏற்ற வழிகளாம்.
அறநூல்கள்
யாவும் திருக்குறளைஅடியொற்றியே எழுந்துள்ளன என்பதை மறவற்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக