இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…90.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
நல்லவர் நட்பு நன்மை தரும்.
“நல்லோர் செயும் கேண்மை நாடோறும் நன்றாகும்
அல்லார் செயும் கேண்மை ஆகாதே – நல்லாய்கேள்
காய் முற்றின் தந்தீங் கனியாம் இளந்தளிர்நாள்
போய் முற்றின் என்னாகிப் போம்.”
நற்குணம்
உடைய பெண்ணே கேட்பாயாக….! காய் முற்றினால்
இனிய சுவை உடைய நல்ல பழம் கிடைக்கும்; இளந்தளிர் பல நாள்கள் கடந்து முற்றினால் பயன்
இல்லையே ! அவைபோல, நல்லோரிடம் கொள்ளும் நட்பு
நாள்தோறும் இனிதாக வளர்ந்து நன்மை தரும் ; தீயோரிடம் நட்புக் கொண்டால் நாள்தோறும் வளராது தீமையே செய்யும்.
“நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு “ –குறள்: 783.
நூலின்
நற்பொருளைக் கற்க கற்க மேன்மேலும் இன்பம் தருதல் போன்று, பழகப் பழக நற்பண்பு உடையவரின்
நட்பும் இன்பம் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக