இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…86.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
“ஆக்கும் அறிவால் அலது பிறப்பினால்
மீக்கொள் உயர்வு இழிவு வேண்டற்க – நீக்க
பவரார் அரவின் பருமணி கண்டுஎன்றுங்
கவரார்கடலின் கடு.”
கொடிய
நஞ்சுடைய பாம்பின் தலையில் இருக்கும் பருத்த மாணிக்கத்தைக் கண்டு அதனை யாரும் நீக்கமாட்டார்.
நிறைந்த பாற்கடலாயினும் அதில் தோன்றிய நஞ்சினை
எவரும் விரும்பி ஏற்றுக் கொள்ள மாட்டார். அறிவின்மையால் கீழோர் எனக் கருதும்
அவர்களும் பெற்ற அறிவினால் உயர்ந்தோராகவே ஏற்றுக்கொள்வர். பிறப்பினால்
எவரையும் உயர்ந்தோராகவும் இழிந்தோராகவும் கொள்ளக் கூடாது.
“வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே.” – பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்,
புறநானூறு:183.
கீழோர்
மேலோர் என்ற வேறுபாடுள்ள மக்களுள், கீழ்க்குலத்துள் ஒருவன் கற்று வல்லவனாயின் அவனை
மேற்குலத்தோரும் போற்றி வழிபடுவர். கல்வியால் கீழோரும் மேலோர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக