இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…84.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
உயர்ந்தோர் என்றும் உயர்ந்தோரே..!
“தம்மையும் தங்கள் தலைமையும் பார்த்து உயர்ந்தோர்
தம்மை மதியார் தமை அடைந்தோர் – தம்மின்
இழியினும் செல்வர் இடர் தீர்ப்பர் அல்கு
கழியினும் செலாதோ கடல்.”
அலை
எழுந்து ஆர்ப்பரிக்கும் கடல் அருகே இருக்கும் உப்பங்கழியிலும் சென்று பாயும், அதுபோல,அறிவிலும்
உயர்ந்த ஒழுக்கங்களிலும் உயர்ந்த சான்றோர், தம்மைச் சார்ந்தவர் வறுமையில் உழலும் தாழ்ந்தவராயினும்
அவர் இருக்கும் இடம் சென்று அவருடைய துன்பத்தை நீக்குவர்.
“ இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே.” – பெருஞ்சித்திரனார்,
புறநானூறு: 163.
என்
இனிய துணைவியே ….! குமணன் எமக்கு அளித்த செல்வத்தை இன்னார் இனியார் என்று பாராது ,
என்னையும் கேட்காது, நாம் மட்டுமே வளமுடன் வாழ வேண்டும் என்று பாதுகாத்து வைத்துக்
கொள்ள நினையாது எல்லோர்க்கும் வழங்கி மகிழ்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக