இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…78.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
”சினம் காக்க.
“உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கு சினங்காத்துக்
கொள்ளும் குணமே குணம் என்க – வெள்ளம்
தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து
விடுத்தல் அரிதோ விளம்பு.”
வெள்ளம்
புகுந்து ஊரை அழித்துவிடாமல் கரையை வலுவாகக் கட்டி காத்தல் அரிய செயலாகும்; ஒரு சிலர் நலன் காக்கக் கரையை உடைத்தல்
எளிய செயலாகும். அதுபோல, எதற்கெடுத்தாலும் சினம் கொள்ளுதல் நல்ல குணம் அல்ல
; உயிரை மாய்க்கும் தன்மையுடைய சினம் கொள்ளாமல் அடக்கிக் கொள்ளும் குணமே நற்குணமாகும்.
”வெல்வது வேண்டின் வெகுளாதான் நோன்பு இனிதே”- இனியவை நாற்பது: 24.
எடுத்த
செயலில் வெற்றி பெற வேண்டின் எவரிடத்தும் சினம் கொள்ளாத உள்ள உறுதி மிக இனிதே,.
மனிதனாய்
இரு, எந்நிலையிலும் சினம் கொள்ளாதே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக