இளமையில்
கல்: கற்க கசடறக் கற்பவை…92.
உலகநாதர்
இயற்றிய உலகநீதி
”மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனந்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க
வேண்டாம்
சினந்தேடிஅல்லலையும் தேட வேண்டாம்
சினத்திருந்தார் வாசல்வழிச்
சேர வேண்டாம்
வனந்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய்
நெஞ்சே.”
அலைபாயும்
மனம் நினைத்தபடியெல்லாம் நீ போகாதே. பகைவனை
உறவு என்று எண்ணி நம்பி விடாதே. பாடுபட்டு உழைத்துச் சேர்த்ததை உண்டு மகிழாமல் வீணே
மண்ணில் புதைக்காதே. கையில் பொருள் இருக்கும் காலத்தே நாளும் தருமம் செய்யத் தவறாதே.
சினங்கொண்டு செய்வதறியாது தடுமாறித் துன்பம் அடையாதே. உன்மீது கோபம் கொண்டிருப்பவர்
வீட்டின் வழியே செல்லாதே. காட்டில் விலங்குகளை
வேட்டையாடும் குறவருடைய பெண்ணாகிய வள்ளியை மணம் புரிந்த முருகனை வாழ்த்தி வழிபடுவாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக