இளமையில் கல்: கற்க கசடறக் கற்பவை…83.
சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறி.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.
“இல்லானுக்கு அன்பு இங்கு இடம் பொருள் ஏவல் மற்று
எல்லாம் இருந்து அவனுக்கு என் செய்யும் – நல்லா
மொழி இலார்க்கு ஏது முது நூல் தெரியும்
விழி இலார்க்கு ஏது விளக்கு.”
நற்குணம் உடைய பெண்ணே ….!
வாய்
பேச இயலாதவனிடம் சிறப்பு வாய்ந்த பழைய நூல் இருந்தும் பயனில்லை ; கண் பார்வை இல்லாதவன்
முன்னே விளக்கு இருந்தும் பயனில்லை ; அவ்வாறே,
உயிர்களிடத்து அன்பு இல்லாதவனிடம் வசதியாக வாழ்வதற்குரிய இடமும், பொருளும் , கூப்பிட்ட குரலுக்கு ஓடிவர ஆள்களும் இன்ன பிறவும் இருந்தாலும் பயனில்லை.
“அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை.” – நல்லந்துவனார், கலித்தொகை:133.
அன்பு
எனப்படுவது தன் சுற்றத்தாரைச் சினவாதிருத்தல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக