ஞாயிறு, 25 ஜனவரி, 2026

தமிழமுது –190– தொல்தமிழர் இசை மரபு:50. யாழோசையில் மயங்கும் அசுணம், ஆம்பல் பண்.

 தமிழமுது –190– தொல்தமிழர் இசை மரபு:50.  

    யாழோசையில் மயங்கும் அசுணம்ஆம்பல் பண். 

  1.  நற்றிணை.  

விழுந்த மாரிப் பெருந்தண் சாரல்  

 கூதிர்க் கூதளத்துஅலரி நாறும்   

மாதர் வண்டின் நயவரும் தீம்குரல்   

மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும். 

                                           கூற்றங்குமரனார்,244:1 –4  மழை பெய்த பெரிய குளிர்ச்சியான  சாரலில் கூதிர் காலத்தில் கூதளம் மலரும்அதில் தேன் உண்டு மணம் வீசும்அழகிய வண்டு இசை எழுப்பும் ; கேட்டற்கு விருப்பம் தரும் அதன் இசைய யாழோசை என்று கருதி மணம் வீசும் மலைப்பிளவில் தங்கியிருக்கும் அசுணப்பறவை செவி கொடுத்துக் கேட்கும் ( இனிய இசையைக் கேட்டு மகிழும் இப்பறவை கொடூர இசையைக் கேட்டால் அவ்விடத்திலேயே உயிர்விடும் என்பர்.சங்க இஅலக்கியங்களில் இடம்பெறும் இப்பறவை அசுணம் என்றும் அசுணமா என்றும் குறிக்கப்படுகிறது அசுணம் பறவையாவிலங்கா?)  

ஆம்பல் பண் :  

 உதியன் மண்டிய ஒலிதலை ஞாட்பின்   

இம்மென் பெருங்களத்து இயவர் ஊதும்  

ஆம்பலம் குழலின் ஏங்கி  

 கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே.”  

                                                                       ” இளங்கீரனார்113: 9 –12. உ தியன் சினந்து ஒலிக்கும் இடத்தையுடைய போர்க்களத்தில் களம் பாடுநருடன் இன்னிசைக்கருவி இசைப்போர் விரைவாக இசைக்கும் ஆம்பல் என்னும் பண் உடைய குழல் இசை ஒலித்தது போலிருந்ததுஅங்ஙனம் அழுது கலங்கி வருத்தமுற்றுத் துன்பம் கொண்ட கண்களால் எனை நோக்கினாள்என்ற தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலவன் வழியில் அவளை நினைத்துக் கூறியது.  

 

.............................................தொடரும்.................................. 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக