ஞாயிறு, 18 அக்டோபர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -45. கடவுள் உறையும் ஆலமரம்.:

 .................This  Blogger For Sale..kalappal. Blogspot. Com ................. 

  Please visit  : Analytical Report-2026 –Goole. 

 தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -45. 

  முனைவர் இரெ. குமரன்: 1. நற்றிணை: 

                 தொல்தமிழர் -   வழிபாடு : கடவுள் உறையும் ஆலமரம்.:  

பாலை:  

 “ முல்லை தாயகல் அதர்ச்சிறு நெறி    

அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த்    

தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்   

நெடுவீழ் இட்ட கடவுள் ஆலத்து    

உகுபலி அருந்திய தொகு விரற் காக்கை....”   

                               கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார். நற். 343: 1 –5. 

                               தோழி.....! முல்லைக்கொடி படர்ந்த மலையிடைப்பட்ட சிறிய வழியை அடையாது, அங்கு அமைந்த அழகிய குடியிருப்புகள் உடைய சிற்றூரிலே மலரின் மகரந்தத் தாதுக்களே எருவாகக் கிடக்கும் தெருக்களின் வழியே ஆநிரை செல்லும் ; அவற்றின் முதுகிலே தீண்டும் நெடிய விழுதுகள் இறங்கிய, கடவுள் உறையும் ஆலமரம் ; அங்குக் கடவுளுக்குப் படைத்துவைத்த பலி உணவைச் சேர்ந்த விரல்களை உடைய காக்கைகள் உண்ணும்.  

( பொருள் தேடிச் சென்ற தலவனின் பிரிவால் வருந்தும் தலைவி தோழியிடம் தன் ஆற்றாமையைக் கூறினாள்.)  

( தாய - படர்ந்த ; மறுகு - தெரு. ;  உகுபலி - உதிர்த்த பலியுணவு. ; ) 

 ..................................................தொடரும்......................................  

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக