புதன், 11 நவம்பர், 2026

தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -63. வெற்றிக் கூத்தாடும் சேரலாதன்:

   தொல்தமிழர் வழிபாடுகளும் விழாக்களும் -63. 

  முனைவர் இரெ. குமரன்: 4. பதிற்றுப்பத்து : 

             தொல்தமிழர் -   வெற்றிக் கூத்தாடும் சேரலாதன்:  

“விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்   

கோடியர் முழவின் முன்னர் ஆடல்  

வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி    

வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து  

இலங்கும் பூணன் பொலங்குடி உழிஞையன்  

மடம் பெருமையின் உடன்று மேல்வந்த   

வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி  

வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.”  

                                                    - காக்கை பாடினியார் நச்செள்ளையார், ஆறாம்பத்து : வென்றிச் சிறப்பு ; 56. 

 விழாக்கள் பெருமையோடு விளங்கிய அகன்ற தன் ஊரிடத்தே கூத்தரது முழவின் முன்னர் ஆடுதலை வல்லவன் அல்லன் அவன் கண்ணி வாழ்வதாக.    

வெற்றி உண்டாதற்குக் காரணமான முரசம் ஒலிப்ப, வாளை உயர வீசி, விளங்குகின்ற ஆபரணங்களை அணிந்து பொன்னாற்செய்த கொடியாகிய உழிஞையினது பூவைச் சூடி, அறியாமை மிகுதலால் பகைகொண்டு தன் மேல் படையெடுத்து வந்த பகை வேந்தர் தம் உடம்பை மறத்தற்குக் காரணமான வெற்றிச் செல்வத்தை உடையவனும் வீரர்கள் அழிந்து கெட்ட போர்க்களத்தில் ஆடுபவனுமாகிய அரசன் சேரலாதன்.  

( விழவு - விழா ;  கோடியர் - கூத்தர் ;  முழவு - மத்தளம்  கண்ணி - தலையில் சூடும் மாலை.) 

 ....................................தொடரும்.......................................  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக