ஞாயிறு, 2 ஜூலை, 2017

திருக்குறள் – சிறப்புரை :581
ஒற்றாடல்
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். --- ௮௧
ஒற்றால் உள்ளவை அறிதலும் சான்றோர் உரைத்த அறநூல்களைக் கற்றறிதலும் ஆகிய இவை இரண்டு கடமைகளையும் மன்னன் தன்னுடைய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும்.
”அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிதுநின் பெருங்கலி மகிழ்வே.” – பதிற்றுப்பத்து.
வேந்தே…! நின்னொடு மனம் பொருந்தி இயைந்திருக்கின்ற, அமைச்சர் முதலிய அரசியல் சுற்றத்தாரோடு காட்சியளிக்கும் நின் திருவோலக்கச் சிறப்பு, துய்த்தற்கு என்றும் இனியதாகும்..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக