திருக்குறள்
– சிறப்புரை :607
இடிபுரிந்து
எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்று
இலார்.
---- ௬0௭
முயற்சியின் பெருமை அறியாது சோம்பலை விரும்பித் துய்ப்பவர் பிறரால் கண்டிக்கப்பட்டுப்
(திருந்தாதவர்) பலரும் இகழ்ந்துபேசும் நிலையை அடைவர்.
” தலையின் இழிந்த
மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. --- குறள்.
964
நற்குடிப்
பிறந்த மாந்தர் தம் உயர்ந்த நிலையைவிட்டுத் தாழ்ந்தவழி தலையிலிருந்து வீழ்ந்த
மயிரினைப் போன்றவர் ஆவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக