திருக்குறள்
– சிறப்புரை :589
ஒற்றொற் றுணராமை
ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப்
படும்.
--- ௫௮௯
ஒற்றறிய மூன்று ஒற்றர்கள் ஒருவரை ஒருவர் அறியாவண்ணம் ஒற்றறிதலில் ஈடுபடவேண்டும்
அவ்வாறு ஒற்றரர்கள் அறிந்துவந்து சொல்லிய செய்திகள் ஒன்றுபோல் இருக்குமானால் அஃது உண்மை
என்று தெளிய வேண்டும்.
“
நில்லாத காட்சி நிறையில் மனிதரைப்
புல்லா
விடுதல் இனிது.” – இனியவை நாற்பது.
தெளிவில்லாத அறிவினை உடையாரையும் நன்னடத்தை இல்லாதாரையும் சேராது விலகி
இருத்தல் இனிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக