திருக்குறள்
– சிறப்புரை :602
மடியை மடியா
ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு
பவர்.
---- ௬0௨
உழைப்பால் உயர்ந்த தம்குடியை மேலும் உயர்த்த நினைப்பவர் சோம்பலுக்கு அடிபணியாது
சோம்பல் மடியுமாறு மேன்மேலும் முயன்று முன்னேற வேண்டும்.
”நலனும்
இளமையும் நல்குரவின் கீழ்ச் சாம்
குலனும்
குடிமையும் கல்லாமக் கீழ்ச் சாம்” – நான்மணிக்கடிகை.
அழகும் இளமையும் வறுமையால் கெடும் ; குலத்து உயர்வும் குடிப்பெருமையும்
கல்லாமையால் கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக