திருக்குறள்
– சிறப்புரை :583
ஒற்றினான் ஒற்றிப்
பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொள்ளக்கிடந்தது
இல்.
--- ௫௮௩
ஒற்றரால் நாட்டில் நடப்பதை அன்றாடம் அறிந்துகொள்ள முயலாத மன்னனுக்குப்
பகைவென்று வெற்றி அடைவதற்கு வழி யாதும் இல்லை.
“
உளநாள் வரையாது ஒல்லுவது ஒழியாது
செல்லும் தேஎத்துக்கு உறுதுணை தேடுமின்.” –
சிலப்பதிகாரம்.
வாழும் காலத்தை வறிதே கழிக்காமல், இறந்தபின் எய்தும் மறுமை உலகுக்கு உற்ற
துணையாகிய அறவழியைத் தேடுங்கள்.
நன்று.
பதிலளிநீக்கு