திருக்குறள்
– சிறப்புரை :592
உள்ளம் உடைமை
உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி
விடும்.
---- ௫௯௨
உள்ளம் நிறைந்த ஊக்கமே (அழிவில்லாத) நிலையான
செல்வமாகும்; பிற செல்வம் எல்லாம் நில்லாது நீங்கிவிடும்.
”உரனுடை உள்ளத்தைச்
செய்பொருள் முற்றிய
வளமையான் ஆகும்
பொருள் இது என்பாய்
இளமையும் காமமும்
நின்பாணி நில்லா.”
– கலித்தொகை.
தலைவ..!
நீதான் வலிய மனத்தைக் கொண்டவன் தேடும் பொருளை ஈட்டிய பின்னர் அப்பொருளே இன்பம் என்று
கொண்டாய். இளமையும் காமமும் நின்னிடத்தே நிலைபெற்று நில்லாமல் நாள்தோறும் கழியும்.
நன்று.
பதிலளிநீக்கு