திருக்குறள்
– சிறப்புரை :597
சிதைவிடத்து
ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பா டூன்றும்
களிறு.---
௫௯௭
யானை தன் உடம்பில் அம்பு புதைந்தபோதும் தன்னிலையில் தாழாது தன் பெருமையை
நிலை நிறுத்தும் அதுபோல் தாழ்வு வந்துற்றபோதும் ஊக்கம் உடையார் நிலை குலைய மாட்டார்கள்.
“
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி
அஞ்சார் செய்வது உணர்வார்…..” பழமொழி.
செய்ய வேண்டியதைச் செய்துமுடிக்கும் துணிவுடையார் அஞ்சத்தக்க வினைகள்
எது வந்தாலும் அஞ்சமாட்டார்கள்.
நன்று.
பதிலளிநீக்கு