திருக்குறள்
– சிறப்புரை :584
வினைசெய்வார்
தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும்
ஆராய்வது ஒற்று.
--- ௫௮௪
மன்னனுக்கு உற்றதுணையாக உடனிருந்து பணிசெய்வோரையும் ; தமக்குச் சுற்றமாகச்
சூழ்ந்து இருப்பாரையும் ; வஞ்சகமாகத் தீங்கு செய்ய முயல்வாரையும் மேலும் வேண்டியவர்
வேண்டாதார் என்ற வேறுபாடின்றி அனைவரையும் ஆராய்ந்து அறிதலே ஒற்றறிதலாகும்.
“
குடப்பால் சில் உறை போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.”
புறநானூறு.
குடம் நிறைந்த பாலின்கண் தெளித்த சிலவாகிய பிரை, பால் முழுவதையும் கெடுத்துவிடுவதைப்
போல, பகைவரின் படைத்திரள் முற்றும் கெட்டு அழிய, அவன் ஒருவனே காரணமாயினன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக