திருக்குறள்
– சிறப்புரை :598
உள்ளம் இலாதவர்
எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும்
செருக்கு.
---- ௫௯௮
உள்ள உறுதியுடன் ஊக்கம் இல்லாதவர் உலகத்தாருள் தாமே வண்மை உடையேம் என்று
பெருமையுடன் சொல்லிக்கொள்ளும் தகுதியை அடைய மாட்டார்கள்.
”
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
பேர்
ஆண்மை இல்லாக் கடை.” --- நாலடியார்.
தன் பெயரைக் கல்லில் எழுதக்கூடிய வகையில் சிறந்த செயல்களைச் செய்து புகழ்பெற
மாட்டாதவன் உயர்ந்த குடியிலே பிறந்ததால் மட்டும் என்ன பயன் உண்டாம்..? ஒரு பயனும் இல்லை
என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக