செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

திருக்குறள் – சிறப்புரை :608

திருக்குறள் – சிறப்புரை :608
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். ---- ௬0௮
 நல்ல குடும்பத்தில் பிறந்தவனிடத்தில் சோம்பல் வந்து தங்கிவிட்டால் அது அவனைப் பகைவர்க்கு அடிமையாக்கிவிடும்.
இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். --- குறள்.1040.
’எம்மிடத்துப் பொருள் இல்லை’ என்று மனம் தளர்ந்து சோம்பி இருப்பாரைக் கண்டால் நிலமகள் என்னும் தாய் தனக்குள் (இகழ்ந்து) சிரிப்பாள்.              


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக