திருக்குறள்
– சிறப்புரை : 638
அறிகொன்று அறியான்
எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். ----- ௬௩௮
அரசன், அறிந்து சொல்பவர்தம் அறிவுரையை அழித்து, தானும் ஏதும் அறியான்
என்ற நிலையில், அரசனின் அக்குற்றங்களை நீக்கி உறுதியானவற்றை எடுத்துக்கூறல் அமைச்சனின்
கடமையாகும்..
”
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே
நின்போல்
அசைவுஇல் கொள்கையர் ஆகலின் அசையாது
ஆண்டோர்
மன்ற இம்மண்கெழு ஞாலம்.” --- பதிற்றுப்பத்து.
பகைவருடைய கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச் செய்த வேந்தே..!
, நின் முன்னோர் நின்னைப்போல் மாறுதல் இல்லாத கொள்கை உடையவர்
ஆதலால், நடுக்கமில்லாமல் இம்மண்ணுலகை ஆண்டனர்.
நன்று.
பதிலளிநீக்கு