64. அமைச்சு
திருக்குறள்
– சிறப்புரை : 631
கருவியும் காலமும் செய்கையும்
அருவினையும்
மாண்டது அமைச்சு.
--- ௬௩0
ஓர் அரிய வினையைச் செய்து முடிப்பதற்கு உரிய கருவியும் (உத்தி) ஏற்ற காலமும் செயல் திறனும் (திறமிக்கவர்கள்) ஆகிய எல்லாவற்றையும்
ஆராய்ந்து உரைக்க வல்லவர்களே அமைச்சர்கள்.
“
உணர உணரும் உணர்வு உடையாரைப்
புணரப்
புணருமாம் இன்பம்… ” --- நாலடியார்.
நூலின் பொருளை உணரத்தக்க வகையிலே
உணர்ந்து கொள்ளும் அறிவுள்ளவரை நண்பராகச் சேர்த்துக் கொள்வதனால்தான் இன்பம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக