திருக்குறள்
– சிறப்புரை : 625
அடுக்கி
வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும். ---- ௬௨௫
ஒன்றன் பின் ஒன்றாகத் துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் அவற்றை மனம் தளராது
எதிர்த்து நிற்பவனிடத்துத் துன்பங்கள் துன்பப்பட்டுப் போகும்.
“
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண்
துனி
அஞ்சார் செய்வது உணர்வார் …” --- பழமொழி.
செய்யத்தக்கதைச் செய்யும் துணிவு உடையார் அஞ்சத்தக்க வினைகள் எதுவந்தாலும்
அஞ்ச மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக