திருக்குறள்
– சிறப்புரை : 626
அற்றேமென்று
அல்லல் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல்
தேற்றா தவர். --- ௬௨௬
பொருளைப் பெற்றபோது அதனைப் பாதுகாத்து வைக்கத் தெரியாது இழந்தவர்கள் பொருளை
இழந்துவிட்டோம் என்று துன்பப்படுவார்களோ ?
( படமாட்டார்கள்)
”
அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து
இலம்
என மலர்ந்த கையர் ஆகித்
தம்
பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர்.” – மலைபடுகடாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக