திருக்குறள்
– சிறப்புரை : 620
ஊழையும் உப்பக்கம்
காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று
பவர்.
--- ௬௨0
மனம் தளராது எடுத்துக்கொண்ட செயலை முடிக்கக் கடுமையாக முயற்சி செய்பவர்
விதிப்பயனையும் புறமுதுகிட்டு ஓடச் செய்து வெற்றி காண்பர்.’ விதியை மதியால் வெல்லலாம்.’
“
ஒய்யா வினைப் பயன் உண்ணும் காலை
கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்.”
– சிலப்பதிகாரம்.
அறிவுடையோர், நீக்க இயலாத ஊழ்வினையின் பயனைத் துய்க்கும் காலத்தில் ஒரு
போதும் செயலிழந்து வருந்த மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக