திருக்குறள்
– சிறப்புரை : 635
அறனறிந்து ஆன்றமைந்த
சொல்லான்எஞ் ஞான்றும்
திறனறிந்தான்
தேர்ச்சித் துணை.
----- ௬௩௫
அறநெறிகளை ஆராய்ந்து அறிந்தவனாய்,
ஆழ்ந்த புலமை சான்ற சொற்களைக் கூறுவானாய், எக்காலத்திலும் செயலாற்றும் திறன் உடையவனாய்
விளங்கும் ஒருவனே அரசனுக்குத் துணையாகும் தகுதியுடையவனாவான்.
”
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமைக்
கொண்ட வழி.” –கலித்தொகை.
தலைவ..! நீ, தமக்கு வருகின்ற இறப்பையும் மூப்பையும் மறந்திருக்கின்ற அறிவில்லாதார்
வழியிலே செல்லாமல், அவ்வழியிலிருந்து மாறுபட்ட நல்லவர் வழியை உனக்கு வழியாகக் கொள்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக