திருக்குறள்
– சிறப்புரை : 636
மதிநுட்பம்
நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாஉள முன்னிற்
பவை.
----- ௬௩௬
இயற்கையாகவே நுண்ணறிவிற் சிறந்தார், நூல்பல காற்றுத்தேர்ந்தார் முன், மிகநுட்பமான சூழ்ச்சிகளால் முன்னிற்பவை யாவை உள்ளன..?
சூழ்ச்சிகளை வெல்லும் ஆற்றலைடைய ஆன்றோரே அமைச்சராவர்.
“
அறனும் பொருளும் வழாமை நாடி
தற்தகவு
உடைமை நோக்கி மற்று அதன்
பின்
ஆகும்மே முன்னியது முடித்தல்
அனைய
பெரியோர் ஒழுக்கம்….” –அகநானூறு.
அறமும் பொருளும் வழுவாத வகையை
ஆராய்ந்து தனது தகுதியை உணர்ந்து, அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் அறிவுடையோர்
செயலாம்.
நூலறிவும்,நுண்ணறிவும் உடையாரை வெல்வதரிது.
பதிலளிநீக்கு