திருக்குறள்
– சிறப்புரை : 627
இலக்கம் உடம்புஇடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறாக்
கொள்ளாதாம் மேல்.---- ௬௨௭
உடம்பானது துன்பத்திற்கு இலக்காவது இயற்கை என்பதறிந்த சான்றோர்கள், .தமக்குத்
துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்க மாட்டார்கள்
“
எய்தாத வேண்டார் இரங்கார் இகழ்ந்ததற்குக்
கைவாரா வந்த இடுக்கண் மனம் அழுங்கார்
மெய்யாய
காட்சி யவர்.”--- ஆசாரக்கோவை.
உண்மைகளை உணர்ந்த அறிவுடையார், கிடைத்தற்கு அரியவற்றை விரும்பார்; இழந்ததற்கு
வருந்தார் ; தீராத துன்பம் நேர்ந்தவிடத்து மனம் கலங்கார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக