திருக்குறள்
– சிறப்புரை : 634
தெரிதலும் தேர்ந்து
செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது
அமைச்சு.
----- ௬௩௪
செய்யத்தக்க செயலை ஆராய்ந்து
தெரிந்து கொள்ளும் திறனும் அவ்வாறு
தேர்ந்தெடுத்த செயலை ஆற்றும் முறைகளை அறிவுறுத்தலும் பின் தன் கருத்தை ஐயத்திற்கு இடனின்றி
துணிந்து கூறும் வல்லமை உடையவனே சிறந்த அமைச்சனாவான்.
”மன்பதை
காக்கும் நின்புரைமை நோக்காது
அன்பு
கண் மாறிய அறனில் காட்சியொடு
நும்மனோரும்
மற்று இனையர் ஆயின்
எம்மனோர்
இவண் பிறவலர் மாதோ” – புறநானூறு.
வேந்தே..! மக்களைக் காக்கும் பெரும் பொறுப்பினை உணராது அன்பின்றி அறனற்ற
முறையில் நீயும் நும்மை ஒத்தாரும் ஆட்சி செய்வார்களானால் எம்மைப் போன்றோர் இவ்வுலகில்
பிறவாதிருத்தலே நன்று,
நன்று.
பதிலளிநீக்கு