திருக்குறள்
– சிறப்புரை :609
குடியாண்மை
யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக்
கெடும்.
---- ௬0௯
குடும்பம் நடத்தத் தெரியாதவன் என்னும் குற்றம் சுமந்த ஒருவன் தன் சோம்பலை
முயற்சி என்னும் ஆளுமையால் மாற்ற (ஒழிக்க)
அக் குற்றம் நீங்கிவிடும்.
” சாவது எளிது
அரிது சான்றாண்மை நல்லது
மேவல் எளிது அரிது மெய் போற்றல்….. “ ---- ஏலாதி.
உயிர்விடுதல்
எளிது ; மேலான கல்வி கேள்விகளால் நிறைந்து ஒழுகுதல் அரிது. மனை வாழ்க்கை ஏற்றல் எளிது
; அதன்கண் ஒழுக்கத்தைக் காத்தல் அரிது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக