வெள்ளி, 1 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 639

திருக்குறள் – சிறப்புரை : 639
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். ---- ௬௩௯
அரசனுக்கு அருகில் இருந்துகொண்டே அவனுக்குத் தீங்கு இழைக்க எண்ணும் மந்திரி, எழுபது கோடி பகைவர்களுக்கு இணையானவன்.
கூட இருந்து குழி பறிப்பவன் கொடுமையானவன்.
“ வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு. ----குறள்.882.

வாளைப் போல் வெளிப்படையாக ”வீழ்த்துவோம்” என வரும் பகைவரைக் கண்டு அஞ்சாது இருத்தல் வேண்டும் ;  வஞ்சக எண்ணம் கொண்டு நண்பர்கள் போல் உறவாடும் பகைவர்தம் தொடர்பைக் கண்டு அஞ்சுதல் வேண்டும். 

1 கருத்து: