செவ்வாய், 19 செப்டம்பர், 2017

திருக்குறள் – சிறப்புரை : 656

திருக்குறள் – சிறப்புரை : 656
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.--
ஈன்ற தாய் பசியால் துன்புற்றாலும் (அதனைக் கண்டு வருந்திய மகன்) அத்துன்பத்தைப் போக்கும் பொருட்டுச் சான்றோர்களால் இகழ்ந்துரைக்கப்படும் செயலைச்  செய்யக்கூடாது.
“மடங்காப் பசிப்பினும் மாண்புடையாளர்
தொடங்கிப் பிறர் உடைமை மேவார்..” ----பழமொழி.

சான்றோர், தம்முடைய உடம்பு ஒடுங்கும்படி பசியால் வாடினாலும் பிறர் பொருளைக் கொள்ள விரும்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக