திருக்குறள்
– சிறப்புரை : 654
இடுக்கண் படினும்
இளிவநந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி
யவர்.
--- ௬௫௪
எந்த நிலையிலும் மாறாத தெளிவான அறிவுடையார், தாம் வறுமையுற்றுத் துன்புற
நேர்ந்தாலும் அத் துன்பத்தினின்றும் நீங்க
இழிவான செயல்களைச் செய்யமாட்டார்கள்.
“
செய்யீரோ என்னானும் என்னும் சொற்கு இன்னாதே
பையத்
தாம் செல்லும் நெறி. –நாலடியார்.
ஏதாவது உதவி செய்ய மாட்டீரோ.. என்று பிறரிடம் இரந்து கேட்கின்ற சொல்லைக்காட்டிலும்
வறுமையுடன் வாழ்வது அவ்வளவு துன்பம் உடையதாகுமோ..? ஆகாது என்பதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக