திருக்குறள்
– சிறப்புரை : 650
இணரூழ்த்தும்
நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரை
யார்.---- ௬௫0
நுண்ணிய நூல் பல கற்றும், தாம்
கற்றதைப் பலரும் பயன் பெறுமாறு விரித்துரைக்கும் ஆற்றல் அற்றவர்கள், கொத்தாக மலர்ந்திருந்தும்
மணம் கமழாத மலர்களை ஒத்தவர் ஆவர்.
“
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசுஅறக்
கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல்
ஆசு
அறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய
என்னார் தொல் மருங்கு அறிஞர்.” – குறிஞ்சிப்பாட்டு.
சான்றாண்மையும் பெருமையும் ஒழுக்கமும் குறையும் என்றால், அவற்றைக் குற்றமற
நீக்கிப் புகழை நிலை நிறுத்துதல் என்பது தெளிந்த அறிவுடைய பெரியோர்க்கும் எளிதில்லை
என்று கூறுவர் சான்றோர்.
நன்று.
பதிலளிநீக்கு